கொள்ளையனால் தாக்கப்பட்ட கோயில் காவலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கொள்ளையனால் தாக்கப்பட்ட கோயில் காவலாளி  சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
X
மயிலாடுதுறையில் கொள்ளையனால் தாக்கப்பட்ட கோயில் காவலாளி திருவாரூர் மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்

மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரையில் விசாலாட்சி சமேத படித்துறை விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோயிலின் இரவுநேர காவலராக செங்கமேட்டுத்தெருவை சேர்ந்த சாமிநாதன்.55. என்பவர் கோயிலிலேயே தங்கி பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி கோயிலில் சுவர் ஏறி குதித்து சாமிநாதனை கொடூரமாக தாக்கிவிட்டு, கோயில் சுவாமி சன்னதி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோ மற்றும் சில்வர் உண்டியலை உடைத்தபோது உண்டியலில் பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றமடைந்த மர்மநபர் தப்பி ஓடி விட்டார்.

படுகாயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த சாமிநாதன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையனை மயிலாடுதுறை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

#Instanews #TamilNadu #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #மயிலாடுதுறை #கோவில்காவலாளி #மரணம் #Mayiladuthurai #TempleSecurity #Died #death #temple #security #robbery #police #india #crime #criminal

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்