வள்ளாலகரம் ஸ்ரீஞானவிநாயகர் ஆலய கும்பாபிஷேகம் -பக்தர்கள் தரிசனம்

வள்ளாலகரம் ஸ்ரீஞானவிநாயகர் ஆலய கும்பாபிஷேகம் -பக்தர்கள் தரிசனம்
X

வள்ளாலகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஞானவிநாயகர் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாடுதுறை அருகே, வள்ளாலகரம் ஸ்ரீஞான விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் கிராமத்தில், ஸ்ரீஞானவிநாயகர் ஆலயம் உள்ளது. கிராம மக்களின் முயற்சியால் புதுப்பிக்கப்பட்ட இந்த ஆலயத்தில், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி, அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கி, முதல்கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டது.

தொடர்ந்து, கும்பாபிஷேகத்தன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையில், மகா பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை செய்யப்பட்டு, பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை, சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தைச் சுற்றி வந்து ஆலய விமான கும்பத்தை அடைந்தனர். பின்னர், அங்கு வேதவிற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்