கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை அருகே என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த நான்காண்டுகளுக்கு (2017ஆம்ஆண்டு) முன்பு அதிமுக அரசால் மூடப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பல மாதமாக சம்பளம் இன்றி கடனில் தவித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் வசித்து வரும் பல்லாயிரக்கணக்கான கரும்பு விவசாயிகள், கரும்பு பயிரிட முடியாமல் தவித்து வருகின்றனர். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலை இந்த ஆலை மட்டும் தான். தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்ப்பதற்காக மூடப்பட்ட, இந்த ஆலையை தற்போது பதிவேற்றுள்ள புதிய அரசு, இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்து கரும்பு விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் தலைமையில் தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil