மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவிகள் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவிகள் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
X

மயிலாடுதுறை அருகே மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனம் கல்லூரி மாணவிகள் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் மாணவிகள் மற்றும் சித்தர்காடு ஊராட்சி சார்பில் பொதுமக்களிடம் மஞ்சப்பையை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மஞ்சப்பை பயன்பாடு, வீட்டுத் தோட்டம் அமைப்பதன் பயன்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து அளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி கையில் பதாகைகள் ஏந்தி ஆதீனம் கலைக் கல்லூரி மாணவிகள் ஊராட்சியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி அலுவலகத்தை வந்தடைந்தனர். இதில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் சி. சுவாமிநாதன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!