மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை,பணம் திருட்டு

மயிலாடுதுறை அருகே  வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை,பணம் திருட்டு
X
திருட்டு நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன.
மயிலாடுதுறை அருகே காளி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகை, 22ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா காளி கிராமத்தை சேர்ந்தவர் பாலகுரு (62). இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த சனிக்கிழமை தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு புறப்பட்டு சீர்கழிக்கு சென்றுள்ளார்.

மீண்டும் தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் வாசல் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர். சோதனையில் மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து, கிரில் கேட் பூட்டை உடைத்து, கதவை நெம்பி உடைத்து உள்ளே நுழைந்து வீட்டின் இரு அறைகளிலும் உள்ள இரண்டு பீரோவை மர்ம நபர்கள் உடைத்து இருப்பது தெரியவந்தது. பீரோவில் வைத்திருந்த ஆரம், டாலர், நெக்லஸ், செயின், பிரேஸ்லெட், மோதிரம், தோடு உள்ளிட்ட 14 பவுன் தங்க நகைகளும், ரூ.22ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருட்டு போயுள்ளதாக வீட்டின் உரிமையாளர் பாலகுரு தெரிவித்தார்.

இதுகுறித்து மணல்மேடு போலீசார் மேற்கொண்டு விசாரனை செய்து வருகின்றனர். மேலும் நாகையிலிருந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை செய்யப்பட உள்ளது.

Tags

Next Story
ai marketing future