கருணாநிதி நினைவு தினம்: மயிலாடுதுறையில் திமுகவினர் அமைதி பேரணி

கருணாநிதி நினைவு தினம்: மயிலாடுதுறையில்  திமுகவினர் அமைதி பேரணி
X
கருணாநிதியின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் அமைதி பேரணியாக சென்று திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்

கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுகவினரால் அனுசரிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் திமுகவினர் அமைதி ஊர்வலம் நடத்தினர்.

செம்மங்குளம் அருகே துவங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கிட்டப்பா அங்காடியில் முடிவடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மற்றும் ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் செம்பனார்கோவில் திருக்கடையூர் மங்கைநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்