மயிலாடுதுறை பகுதியில் நீரில் மூழ்கி அழுகிய நாற்றுகள்: விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை பகுதியில் நீரில் மூழ்கி அழுகிய நாற்றுகள்: விவசாயிகள் வேதனை
X
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீரில் மூழ்கி அழுகிய  நாற்றுகளை  காட்டும் விவசாயிகள்.
மயிலாடுதுறை பகுதியில் மழை நீரில் மூழ்கி அழுகிய நாற்றுகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. மழை விட்டு கடந்த இரண்டு நாட்கள் ஆகிய நிலையில் விவசாயிகள் மழைநீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்கள் தூர் வாராததால் வடிகாலில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 தினங்களுக்கு மேலாக நடவு செய்யப்பட்ட சம்பா நாற்றுகளும், நட்ட பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளது. மயிலாடுதுறை அருகே சித்தர்காடு, மூவலூர், மல்லியம் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் வாய்க்கால் பட்டமங்கலம் வாய்க்கால்கள் தூர் வராததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் நாற்றுகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே, வடிகால்கள் தற்காலிகமாக தூர் வார வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!