/* */

சீர்காழி அருகே பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்ற எம்.எல்.ஏ.

சீர்காழி அருகே பள்ளி மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

HIGHLIGHTS

சீர்காழி அருகே பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்ற எம்.எல்.ஏ.
X

சீர்காழி அருகே பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் இனிப்பு கொடுத்து வரவேற்றார்.

தமிழ்நாடு அரசு ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.அதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி வளாகங்கள் முழுமையாக தூய்மை செய்யப்பட்டு, அரசு வழிகாட்டுதலின் படி கொரோனா வைரஸ் வழிமுறைகளை பின்பற்றி பள்ளி திறக்கப்பட்டுள்ளது.

அப்போது மாணவர்களுக்கு, சானிடைசர், முககவசம் வழங்கி அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். பள்ளிக்கு வந்த மாணவர்களை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மலர் தூவியும், மலர் கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றார்.பள்ளி மாணவ செல்வங்களும் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மகிழ்ச்சியோடும் இன்முகத்தோடும் பள்ளிக்கு வந்தனர்.

இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா அலெக்சாண்டர், சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ், கூடுதல் வட்டார கல்வி அலுவலர் பூவராகவன், வட்டார கல்வி அலுவலர் லட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Updated On: 1 Nov 2021 8:40 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு
  2. உலகம்
    ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி சந்திப்பு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
  4. பரமக்குடி
    ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
  5. கல்வி
    பறக்கும் இறக்கையில்லா பிராணிகள்..! படைப்பின் விசித்திரம்..!
  6. ஈரோடு
    நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர்...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
  8. ஈரோடு
    மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்...
  9. ஆரணி
    ஆரணி அருகே ஸ்ரீமணி கண்டீஸ்வரா் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்