மயிலாடுதுறையில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

மயிலாடுதுறையில் கடையின் பூட்டை உடைத்து  கொள்ளை
X
மயிலாடுதறையில் கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
மயிலாடுதுறையில் கடையின் பூட்டை உடைத்து பணம் சி.சி.டி.வி. கேமராவை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மயிலாடுதுறை மையப்பகுதியில் அமைந்துள்ள கண்ணாரத்தெரு என்ற இடத்தில் அலுமினிய கடை உள்ளது. நேற்றிரவு இந்த கடையின் பூட்டு மற்றும் சி.சி.டி.வி. கேமராவை உடைத்து உள்ளே இருந்த பணம் ஒன்றரை லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமதமாக கடைக்கு வந்த கடையின் உரிமையாளர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நகரின் மையப்பகுதியில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story