கொள்முதல் நிலையங்களில் கொள்ளை: மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் -விவசாயிகள் புகார்

கொள்முதல் நிலையங்களில் கொள்ளை: மூட்டைக்கு  40 ரூபாய் லஞ்சம் -விவசாயிகள் புகார்
X

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் அளித்த விவசாயிகள். 

நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்ளை : மூட்டைக்கு ஒன்றரை கிலோவும், 40 ரூபாயும் லஞ்சம் கேட்கின்றனர் - விவசாயிகள் வேதனை

அரசு நேரடி நெல்கொள் முதல் நிலையங்களில் மூட்டைக்கு ஒன்றுக்கு ரூ.40 லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் பங்கேற்றதால் 5 குழுக்களாக பிரித்து விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடை பணி நடைபெற்று வருவதால் கூடுதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும், நேரடி கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு 40.5 கிலோவிற்கு பதிலாக 42 கிலோ நெல் பிடித்தம் செய்து அதனை வேலை செய்யும் பணியாளர்கள் ஒன்றரை கிலோவை எடுத்து கொள்வதோடு மூட்டைக்கு 40 ரூபாய் பணம் கேட்கின்றனர். கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க வேண்டும். அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சிசிவிடி கேமராக்களைபொறுத்தி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். கடந்த ஆண்டிற்கான பயிர்காப்பீட்டுத் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் கூறுகையில், பயிர்காப்பீட்டிற்கான இழப்பீட்டுத்தொகை கிடைப்பது சம்பந்தமாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பது குறித்து புகார்கள் வந்தால் நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நிரந்தர கட்டடம் மற்றும் தற்காலிக ஷெட் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேவைக்கு ஏற்ப கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி