/* */

மயிலாடுதுறையில் மழை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்தன

மயிலாடுதுறையில் கன மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் மழை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்தன
X

மயிலாடுதுறை கொள்முதல் நிலையங்களில்,மழையில் நடைந்த நெல் மூட்டைகள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 70 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி ஆகிய நான்கு தாலுக்காகளிலும் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படு விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. மேலும் மார்ச் மாதம் முதல் மாவட்டத்திலுள்ள கொள்முதல் நிலையங்கள் படிப்படியாக நிறுத்தப்பட்டது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, பாதுகாப்பாக வைக்க போதிய கிடங்கு வசதி இல்லாததால் நெல் மூட்டைகள் ஒருசில நேரடி கொள்முதல் நிலையத்தில் இருந்து அகற்றப்படாமல், அங்கேயே தார்பாய்கள் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இரவு பெய்த கன மழையால் மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை ஊராட்சியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகி உள்ளது. அவற்றை உடனடியாக லாரிகள் மூலம் கிடங்களுக்கு ஏற்றிச் செல்ல வேண்டும் இல்லையென்றால் நனைந்த நெல் மூட்டைகள் அனைத்தும் முளைக்கத் தொடங்கிவிடும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Updated On: 7 May 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க