மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

மயிலாடுதுறை மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளில் பரவலாக  மழை
X

மயிலாடுதுறையில் பரவலாக பெய்த  மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்  

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெப்பம் தணிந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்தது. மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மயிலாடுதுறையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வடிகால் வசதி இல்லாத சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இந்த மழையின் காரணமாக சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், பருத்தி சாகுபடி செய்து அறுவடைக்காக காத்திருக்கும் பருத்தி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Tags

Next Story
future ai robot technology