தரங்கம்பாடியில் மழையால் பாதித்த பகுதிகளை பூம்புகார் எம்.எல்.ஏ. ஆய்வு

தரங்கம்பாடியில் மழையால் பாதித்த பகுதிகளை பூம்புகார் எம்.எல்.ஏ. ஆய்வு
X

தரங்கம்பாடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

தரங்கம்பாடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட, சர்ச் தெரு மற்றும் குமரன் சன்னதி தெரு பகுதியில் வடகிழக்கு பருவமழையால் மழை நீர் தேங்கி நிற்கிறது.

இந்த பகுதியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன் ஆய்வு செய்தார். மேலும் அவர் அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடனடியாக மழைநீரை அகற்றுவதற்கான பணியை துவங்கவும், வடிகால் வசதி ஏற்படுத்தி தருமாறும் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
ai marketing future