ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் சாலை மறியல்

ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் சாலை  மறியல்
X

காளி ஊராட்சியில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர் 

மயிலாடுதுறை அடுத்த காளி ஊராட்சியில் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அடுத்த காளி ஊராட்சியில் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு அரிசி வழங்கப்பட்டடு வருகிறது. இந்த ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி காளி ஊராட்சி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென ரேஷன் கடை அதிகாரி பூட்டியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மணல்மேடு காவல்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் உடன்படாததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காளி - மணல்மேடு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் மேல்அதிகாரிகளிடம் பேசி உரிய தரமுள்ள அரசி வழங்குவதற்கான நடவடிக்கையை எடுப்பதாக கூறியதால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!