சீர்காழியில் கூடுதல் ஆதார் சேவை மையங்களை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சீர்காழியில் கூடுதல் ஆதார் சேவை மையங்களை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
X

இ பொது சேவை மையம்

இணையதள சேவை பாதிப்பால் குறைந்த நபர்களுக்கு மட்டுமே பதிவு செய்யப்படுவதால் கிராமப் புறமக்கள் அவதிப்படுகின்றனர்

சீர்காழியில் கூடுதல் ஆதார் சேவை மையங்களை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஒன்றியங்களில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆதார் அட்டை பெறுவதற்கு சீர்காழி நகரில் அமைக்கப்பட்டுள்ள நான்கு அரசு ஆதார் சேவை மையங்களையே நம்பியுள்ளனர். இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கும் பிரதான ஆதார் சேவை மையத்தில் இணையதள குறைபாடு மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால் போதிய அளவு பதிவு செய்ய முடியவில்லை. அதேபோல் கொரோனா கட்டுப்பாடு காரணமாக பாரத ஸ்டேட் வங்கியில் இயங்கும் ஆதார் மையம் மூடப்பட்டுள்ளது.

அஞ்சலகத்தில் இயங்கும் சேவை மையத்திலோ அதிகாலையே பதிவு செய்தால் மட்டுமே அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஆதார் பதிவு செய்யப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் இருந்து வரும் மக்கள் ஆதார் சேவையை உடனே பெற முடியாமல் பல நாட்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இணையதள இணையதள சேவை பாதிப்பால் குறைந்த நபர்களுக்கு மட்டுமே பதிவு செய்யப்படுவதால் கிராமப்புறங்களிலிருந்து வரும் மக்கள் அவதிப்படுகின்றனர்.எனவே கிராமப்புற மக்களின் நலன் கருதி சீர்காழி நகரில் கூடுதல் ஆதார் மையங்களை அமைக்கவும் அல்லது அந்தந்த ஊராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என கிராமபுற மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!