தனியார் அறக்கட்டளை மூலம் காவிரி கரையோரம் பனைவிதைகள் நடும் பணி தொடக்கம்

தனியார் அறக்கட்டளை மூலம் காவிரி கரையோரம் பனைவிதைகள் நடும் பணி தொடக்கம்
X
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் வரை காவிரிகரை ஓரம் 1000 பனைவிதைகள் நடும் பணியை தனியார் அறக்கட்டளை தொடங்கியுள்ளது

மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் வரை காவிரிகரை ஓரம் 1000 பனைவிதைகள் நடும் பணியை தனியார் அறக்கட்டளை தொடங்கியது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயற்கை வளம், மண் வளம், சுற்றுச்சூழலை பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சியாக காவிரிக்கரையோரம் ஆயிரம் பனை விதைகளை நடும் பணிகள் தொடங்கியது. மயிலாடுதுறையிலிருந்து காவிரி ஆறு சங்கமிக்கும் பூம்புகார் வரை ஆற்றுப்படுகையில் பனை விதைகளை நடும் முயற்சியில், ஜோதி பவுண்டேஷன் என்ற தனியார் அமைப்பினர் இன்று மயிலாடுதுறை நகரபகுதி காவிரி ஆற்றின்; கரை ஓரத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டனர். தனியார் அமைப்பின் தலைவர்சேகர் தலைமையில், தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நலச்சங்கம், ஸ்ரீஜெயின்சங்கத்தினர் கலந்து கொண்டனர். தனியார் அமைப்பின் இந்த முயற்சியில் பொதுமக்களும் தன்னார்வத்துடன் பங்கேற்று பனைமர விதைகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil