தில்லியில் பெண் காவலர் படுகொலை: மயிலாடுதுறையில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

தில்லியில் பெண் காவலர் படுகொலை: மயிலாடுதுறையில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

தில்லியில் பெண்காவலர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுக மற்றும் மனிதநேயமக்கள் கட்சியினர்.

பெண் காவல் அலுவலரின் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

தில்லி பெண் காவலர் சபியா சைஃபி படுகொலைக்கு நீதி கேட்டு மயிலாடுதுறையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தில்லியில் பெண் காவலர் சபியா சைஃபி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் ஷேக்அலாவுதீன் தலைமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தில்லியில் பெண் காவல் அலுவலர் சபியா சைஃபி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அந்த பெண் காவல் அலுவலரின் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பை பாஜக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், பெண் காவல் கொல்லப்பட்ட வழக்கில், மெத்தனமாக செயல்பட்ட பாஜக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!