போக்சோ சட்டத்தில் பாஜக பிரமுகர் கைது: பொய்புகார் என மனைவி குற்றச்சாட்டு
மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்த பாஜக ஒன்றிய பொதுச் செயலாளர் மகாலிங்கம்(60) . ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 மற்றும் 7 வயது சிறுமிகள் உள்பட சில சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொல்லை உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மகாலிங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்து, 11ம் தேதி சிறையிலடைத்தனர்.
இந்நிலையில், தனது கணவர் மீது பொய் வழக்குப் புனையப்பட்டுள்ளதாக பாஜக பிரமுகர் மகாலிங்கத்தின் மனைவி ராஜலெட்சுமி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். தனது இரண்டு மகள்களை மகாலிங்கம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்த அச்சிறுமிகளின் தந்தையான புகார்தாரர், கைது செய்யப்பட்ட மகாலிங்கத்திடம் தனது நிலத்தை அடமானம் வைத்து வட்டியில்லாமல் ரூ.6 லட்சம் கடன் பெற்றதாகவும், இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் பணத்தை திரும்ப கேட்டபோது, நிலத்தை மகாலிங்கத்தையே வைத்துக் கொள்ளச் சொல்லி, மீதப்பணத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் நிலத்துக்கு அதிக விலை சொன்னதால் நிலத்தை வேண்டாம் என்று மறுத்த மகாலிங்கம் பணத்தை திரும்பத்தர கேட்டுள்ளார். பணத்தை திரும்பத் தர முடியாததாலும், பாஜகவில் தனது கணவரின் வளர்ச்சியை பிடிக்காததால், கம்யூனிஸ்ட் கட்சியிருடன் சேர்ந்து கொண்டு மகளிர் காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் உரிய விசாரணை செய்யாமல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன் கணவரின் வழக்கில் உரிய விசாரணை செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu