மயிலாடுதுறையில் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும் முகாம் துவக்கம்

மயிலாடுதுறையில் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும் முகாம் துவக்கம்
X

மயிலாடுதுறையில் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர்  துவக்கி வைத்தார்

மயிலாடுதுறையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும் முகாமினை கலெக்டர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் நோய் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை ஒரு வயதிற்கு மேற்பட்ட 11,151 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் அடுத்த ஒரு மாதத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் 929 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். மூன்று கட்டங்களாக போடப்படும் இந்தத் தடுப்பூசியை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போட்டுக்கொண்டு உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்திக், நகர தலைவர் செல்வராஜ், தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!