மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..!

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர்  வேட்புமனு தாக்கல்..!
X

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பாரம்பர்ய விவசாயியாக மாறி மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மாடுகளைப் பிடித்துக் கொண்டு ஏர்கலப்பை உடன் நெற்கதிர்களை மாலையாக அணிந்து மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்திய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலின் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக கூட்டணி கட்சியினரின் ஆரவாரத்துடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வேட்பாளர் ம.க ஸ்டாலின் வந்தார்.

விவசாயிகளின் மொத்த உருவமாக பாரம்பரிய உழவனாக வேட்டி,பனியன் உடையில் நெல்மணிகளை கழுத்தில் மாலையாக போட்டு கையில் ஏர்கலப்பை உடன் இரண்டு மாடுகளை ஓட்டிக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் நடந்து பேரணியாக வந்தார். .

வேட்பாளருடன் நான்கு நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து பாமக வேட்பாளர் மா. க ஸ்டாலின் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஏ பி மகாபாரதியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக ம.க ஸ்டாலின் மனைவி செந்தமிழ் செல்வி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!