நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி பாமக.,வினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்த பாட்டாளி மக்கள் கட்சியினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அறுவடை செய்த நெல்லை உடனடியாக விற்பனை செய்ய இயலாத சூழ்நிலை நிலவுவதால் வயல்வெளிகளிலும், களங்களிலும் நெல் மூட்டைகளை விவசாயிகள் வைத்துள்ளனர். திடீரென பெய்யும் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைகிறது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டத்திற்கு உட்பட்ட வில்லியநல்லூர் என்ற பகுதியில் சுமார் 700 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். அறுவடை செய்த நெல்லை விற்கமுடியால் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, வில்லியநல்லூர் உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாயிகளின் தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என அரசுக்கு பாமகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாமக மாநில துணைப் பொது செயலாளர் பழனிசாமி தலைமையில், மாவட்ட செயலாளர் காமராஜ, மாநில இளைஞர் சங்க துணைத் தலைவர் விமல், மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிர் லலிதாவிடம் மனு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu