நெல் கொள்முதல் நிலையம்: தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தினர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் 117 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இந்த ஆண்டு குறுவை அறுவடை பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவரும் நிலையில், இதுவரை சொற்பமான அளவிலேயே கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உடனடியாக திறக்க வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பான தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லுக்கு விரிவாக்க பணி அலுவலரிடம் சான்று பெற வேண்டும் என்ற முறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், நெல் குவிண்டாலுக்கு ரூ. 3000 உயர்த்தி வழங்க வேண்டும்..2020- 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புதுவை மாநிலத்தை போல தமிழ்நாட்டிலும் விவசாயிகளுக்கு பயிர் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu