/* */

கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகள் முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை கோமல் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகள் முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகள் முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் வேதனை
X

மயிலாடுதுறை கோமல் நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் மூட்டைகளில் இருந்து மழையில் நனைந்த நெல் மணிகள் முளைத்தன.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோமல் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் சம்பா பருவத்திற்கான நெல் கொள்முதல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் 15 நாட்களுக்கு முன்பு முன்னறிவிப்பு ஏதுமின்றி கொள்முதல் திடீரென நிறுத்தப்பட்டது.

நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை கிடங்குக்கு கொண்டு செல்லாததால் அந்த நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கின. இருப்பினும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கொள்முதல் நிலைய அலுவலர்கள் விவசாயிகளிடம் இருந்து 5 நாட்கள் வரை நெல்லினை கொள்முதல் செய்துள்ளனர். இதனால் சுமார் 4 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியது. அதற்கு மேல் வைப்பதற்கு கொள்முதல் நிலைய வளாகத்தில் இடமில்லாததால் கொள்முதல் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து விவசாயிகள் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்குக்கு கொண்டு சென்று விவசாயிகளிடம் மீண்டும் கொள்முதலை தொடங்க கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுநாள் வரை கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நெல்லை கொண்டு செல்ல லாரிகள் வராததால் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.

மேலும் அண்மையில் பெய்த கனமழை காரணமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிவிட்டன. இதனால், கடன் வாங்கி நெல் சாகுபடியில் ஈடுபட்டு அறுவடை செய்த நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவந்து காத்திருக்கும் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

Updated On: 28 Oct 2021 12:17 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  3. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  4. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  5. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?