வடகிழக்கு பருவமழை : பேரிடர் ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வடகிழக்கு பருவமழை காலங்களில் பேரிடர் ஏற்பட்டால் எவ்வாறு பொது மக்களை காப்பது என்பது குறித்த பேரிடர் ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஆழ்வார் குளத்தில் மயிலாடுதுறை தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், வெள்ளத்தில் சிக்கி கொள்ளும் மக்களை எப்படி மீட்பது, தண்ணீர் பாட்டில்கள் வாகன டியூப்கள் இவற்றைக் கொண்டு தண்ணீரில் தத்தளிப்பவர்களை காப்பாற்றுவது, அவர்களுக்கு முதலுதவி எவ்வாறு அளிப்பது என்பது குறித்து செயல் விளக்க காட்சிகளை, பொதுமக்களுக்கு தீயணைப்பு வீரர்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.
படகில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளில் செயல்படுவது என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அடைமழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை வெள்ளம் பாதித்த பகுதிகளில், பொதுமக்கள் பாதிக்கப்பட்டால், அவர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவது மற்றும் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்துவதற்கான தீயணைப்பு வீரர்கள் செயல்படுவது குறித்தும் பொதுமக்களுக்கு செய்து காண்பித்தனர்.
மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை வட்டாட்சியர் ராகவன், தீயணைப்புத் துறை அலுவலர் முத்து குமார் மற்றும் பலர் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu