கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ நிவேதா முருகன்

தடுப்பூசி முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவிளையாட்டம் சௌரிராஜன் உயர்நிலைப்பள்ளி மற்றும் மங்கைநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை சார்பாக கொரனோ தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என் பேசினார். மேலும் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் குத்தாலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், மங்கை சங்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அரசு அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu