மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளருக்கு எம்எல்ஏ ராஜகுமார் வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளருக்கு  எம்எல்ஏ ராஜகுமார் வாக்கு சேகரிப்பு
X

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்எல்ஏ ராஜகுமார் 

மயிலாடுதுறை 1வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ ராஜகுமார் வீடுவீடாக சென்று ஆதரவு திரட்டினார்

மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்கு 3 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நகராட்சி 1-வது வார்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லீலாவதி ராமானுஜம் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் வாக்கு சேகரித்தார்.

1-வது வார்டுக்கு உள்பட்ட ஆற்றங்கரைத் தெருவில் வேட்பாளருடன் வீடுவீடாகச் சென்ற அவர் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவருடன், திமுக மாவட்ட பொருளாளர் ரவி, நகர காங்கிரஸ் தலைவர் ராமானுஜம் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சியினர் உடன் சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!