மயிலாடுதுறையில் மு.க ஸ்டாலின் 69-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் மு.க ஸ்டாலின் 69-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

மயிலாடுதுறையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தி.மு.க.வினர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 69-வது பிறந்த நாள் விழாவை தி.மு.க.வினர் கொண்டாடினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க ஸ்டாலின் 69வது பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அந்தவகையில் மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை நகராட்சி 29வது வார்டு உறுப்பினர் ரஜினி தலைமையில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

சித்தர் காட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி எழுதுபொருள் நோட்டுகள் வழங்கினர். இதேபோல் மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சோழம்பேட்டையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகமான அருமை இல்லத்தில் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஞானஇமயநாதன் தலைமையில் தி.மு.க.வினர் காலை உணவு வழங்கினர். அங்கு உள்ள ஆதரவற்ற குழந்தைகள் தமிழக முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!