மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திடம் அமைச்சர் பெரியகருப்பன் ஆசி

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திடம்  அமைச்சர் பெரியகருப்பன் ஆசி
X

மயிலாடுதுறை தருமபுரம்ஆதீனத்திடம் ஆசி பெற்ற அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஆதீனம் இடம்வழங்கியது தொடர்பாக குருமகா சந்நிதானத்துடன் கலந்துரையாடினார்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆசி பெற்றார்.

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பிற்பகல் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தந்தார். அவருக்கு ஆதீனம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து அமைச்சர் பெயரிகருப்பன் அவரது மனைவி ஆகியோர் ஆசிபெற்றனர்.

தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஆதீனம் இடம் வழங்கியது தொடர்பாக குருமகா சந்நிதானத்துடன் கலந்துரையாடினார். இதில் மாவட்ட ஆட்சியர் லலிதா, தாசில்தார் ராகவன், ஆதீன கல்லூரி செயலாளர் செல்வநாயகம், முதல்வர் சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!