மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் வேட்புமனு தாக்கல் செய்தனர்

மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம்  வேட்புமனு தாக்கல் செய்தனர்
X
மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆட்டோவில் புடைசூழ வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆட்டோவில் புடைசூழ அழைத்து வந்து வேட்புமனு தாக்கல்:-

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தனித்து போட்டியிடுகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் பேரூராட்சிகளில் தேர்தலுக்கு முன்னதாகவே மக்களை கவரும் வகையில் நூதனமுறையில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று மயிலாடுதுறை பழை பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வேட்பாளரை புடைசூழ பேரணியாக அழைத்து வந்து நகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.


நகராட்சிக்கு உட்பட்ட 10 வது வார்டில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜ்குமார்(33) வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பாளர்களை ஆட்டோவில் அழைத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தது பொதுமக்களை ஆச்சரித்தை ஏற்படுத்தியது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆட்டோ சின்னம் கேட்டு கிடைக்கப் பெறாததால் நூதன முறையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆட்டோவில் வந்து மனுத்தாக்கல் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இதுவரை 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai marketing future