மயிலாடுதுறை: செப்.12-இல் நடைபெறும் முகாமில் 50 ஆயிரம் பேருக்கு ஊசி போட இலக்கு
கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம், 50ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் லலிதா.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் 12-ஆம் தேதி கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதையொட்டி, முன்னேற்பாடுகள் குறித்த ஊராட்சி தலைவர்கள், அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 241 ஊராட்சி, 2 நகராட்சி, 4 பேரூராட்சிகளிலும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு 50ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசியால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கர்ப்பிணி பெண்கள், மாற்றுதிறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை 12 மணிநேரம், அனைத்து பகுதிகளிலும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதற்கு மக்கள் பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu