மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி முகாம் : எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடங்கி வைப்பு

மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி முகாம் :  எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடங்கி வைப்பு
X

மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ நிவேதா எம். முருகன் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கிய எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் கொரோனா தடுப்பூசி முகாமையும் தொடங்கி வைத்தார்.

திருக்கடையூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டையை வழங்கி, கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாகை மாவட்ட வடக்கு திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு 20 மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் தற்பொழுது கொரோனா தொற்று 2 வது அலை அதிகரித்து வருவதால் தமிழக அரசின் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து திருக்கடையூர் சுற்றுப்பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது.

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் சுமார் 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் பேசிய பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், கொரோனா தடுப்பூசி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று பொதுமக்களிடம் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், திராவிட முன்னேற்ற கழக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அமிர்த விஜயகுமார், வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!