நடமாடும் தடுப்பூசி வாகனம்: மயிலாடுதுறை எம்எல்ஏ கொடியசைத்து தொடக்கி வைப்பு
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போடும் நடமாடும் துரித வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக, இந்த நடமாடும் வாகனம் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த வாகனம், மார்க்கெட் பகுதிகள், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள், நகரப்பகுதிகளுக்கு செல்லும். அங்கு அந்த அந்த பகுதி மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியினை மேற்கொள்ளும்.
அரசு மற்றும் தனியார் அலுவலக பணிக்கு செல்லும் நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள இந்த நடமாடும் வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்த நடமாடும், மருத்துவ வாகனத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 250 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தலாம். இதில் ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள் பணியில் உள்ளனர். தடுப்பூசி செலுத்துவதில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகள் அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சி அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu