மயிலாடுதுறையில் முன்கள பணியாளர்களுக்கு மரியாதை : நலத்திட்ட உதவி
மயிலாடுதுறை அருகே தேசிய தலைவர்கள், முன்கள பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நூற்றுக்கணக்கான மரகன்றுகள் நடப்பட்டு நிவாரண உதவி வழங்ப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா முத்தூர் கிராமத்தில் சமூக நீதி பாசறை தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசத்தலைவர்கள், ராணுவ வீரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வேப்பமரம், அரசமரம், புங்கன் மரம், புளிய மரம், வாகை மரம், நீர் விழுது உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கிராமம் முழுவதும் நடப்பட்டது. மரம் நடுதலின் அவசியத்தை விளக்கும் வகையில்; பொதுமக்கள், குழந்தைகள் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பாசறையின் தலைவர் மணி முன்களப்பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu