அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம்

அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம்
X

மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் 24 மணிநேர கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஆட்சியர் லலிதா தொடக்கி வைத்தார்

தமிழகத்தில் முதற்கட்டமாக மயிலாடுதுறை, காஞ்சிபுரம், தென்காசி, திருப்பத்தூர், பெரம்பலூர் மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டது

மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் முதற்கட்டமாக மயிலாடுதுறை, காஞ்சிபுரம், தென்காசி, திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களின் அரசு மருத்துவமனைகளில் இன்று அத்திட்டம் தொடங்கப்பட்டது. மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி திட்டத்தை தொடக்கி வைத்தார். இதில், தலைமை மருத்துவர் மகேந்திரன், துணை இயக்குநர் பிரதாப்குமார் உள்ளிட்ட மருத்துவ அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself