மயிலாடுதுறை: அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், செவிலியர்களுக்கு விருது.

தன்னலம் பாராது கொரோனா தடுப்புப் பணியாற்றிய மருத்துவர், செவிலியர்களுக்கு சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கத்தினர் விருது வழங்கினர்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சையளித்த, மயிலாடுதுறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், செவிலியர்களுக்கு "சேவை செம்மல்" விருது வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டி விருது வழங்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தன்னலம் பாராமல் பணியாற்றிய, மயிலாடுதுறை நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரவிக்குமார் மற்றும் செவிலியர்களுக்கு சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் சார்பில் "சேவை செம்மல்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!