மயிலாடுதுறை மாவட்டத்தில் தடுப்பூசி பற்றாக்குறை, பொதுமக்கள் ஏமாற்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தடுப்பூசி பற்றாக்குறை, பொதுமக்கள் ஏமாற்றம்
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதால், ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் 2வது தவணை தடுப்பூசி மட்டுமே இன்று போடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்

. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்நிலையில் 18 வயது முதல் 44 வயதிற்குள் உள்ளவர்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மற்றும் பல்வேறு ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்;ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுவருகின்றனர். நேற்றுவரை 55 ஆயிரத்து 597 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 300 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசியும், 1520 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும்,

தடுப்பூசி பற்றாக்குறையால் 2-ஆம் தவணை தடுப்பூசி மட்டுமே போடப்பட்டதாகவும், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் அரசு மருத்துவமனைகள் மற்றும், கோனேரிராஜபுரம், நக்கம்பாடி, தேரிழந்தூர் மேக்கிரிமங்கலம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தடுப்பூசி பற்றாக்குறையால் பொதுமக்கள்; ஏமாற்றமடைந்துள்ளனர்.

Tags

Next Story