மயிலாடுதுறை அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் வடிகால் வாய்க்கால்
மயிலாடுதுறை அருகே 25 ஆண்டுகளுக்கு பிறகு தூர் வராப்பட்ட வடிநீர், வாய்க்கால்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்கால்கள் மற்றும் வடிகால்கள் ஆகியன 431 கி.மீட்டர் தூரத்துக்கு முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் தற்போது தூர்வாரப்படுகிறது.
இதற்காக 5.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மாதம் 28-ஆம் தேதி கனரக வாகனங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகள் தொடங்கின.
இப்பணிகளை மேட்டூரில் திறக்கப்படும் காவிரி நீர் வந்தடைவதற்கு முன்னதாக முடிக்க திட்டமிடப்பட்டு துரிதமாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் அருங்காடு 3 கி.மீட்டர் தொலைவுள்ள இந்த வாய்க்கால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுப்பணித்துறை மூலம் தற்போது தூர்வாரப்படுகிறது.
இந்த வடிகால் வாய்க்கால் தூர்வார படுவதால் மழைக்காலங்களில் மழை நீர் வடியாமல் சுமார் 200 ஏக்கர் பாதிக்கப்படும் நிலையில் தற்போது தூர்வாரப்படுவதால் விளைநிலங்கள் பாதிக்காத வகையில் மழைநீர் வடிய வழிவை செய்யப்பட்டுள்ளதால் தமிழக அரசுக்கும், பொதுப்பணித்துறைக்கும் அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu