பாஜக- ஆர்எஸ்எஸ் அமைப்புகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாஜக ஆர்எஸ்;எஸ் அமைப்புகளைக் கண்டித்து மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்
பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்புகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி, கட்சி அலுவலகம் மற்றும் பத்திரிகை அலுவலகங்களை தீயிட்டு கொளுத்தி ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி வரும், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளைக் கண்டித்து, மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு கட்சியின் வட்ட தலைவர் மேகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட, வட்ட நிர்வாகிகள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றி, முழக்கங்களை எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu