குத்தாலம் அருகே 7 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது; போலீசார் அதிரடி

குத்தாலம் அருகே 7 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது; போலீசார் அதிரடி
X

கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரி மணிகண்டன்.

குத்தாலம் அருகே கஞ்சா வியாபாரியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 7 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவல் சரகம் ஆலங்குடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மாவட்ட எஸ்பி சுகுணா சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து கஞ்சா விற்பனையை தடுத்து குற்றவாளிகளை கைது செய்ய எஸ்பி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் மேற்பார்வையில் செயல்பட்டு வரும் தனிப்படை போலீசார், காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் குத்தாலம் மற்றும் ஆலங்குடி பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது ஆலங்குடி தெற்கு தெருவை சேர்ந்த குருசாமி மகன் மணிகண்டன்.வயது27. என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் வீட்டைச் சுற்றி வளைத்து சோதனையிட்டதில் வீட்டிற்குள் 7 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கஞ்சாவை கைப்பற்றிய தனிப்படை போலீசார் வியாபாரி மணிகண்டனை பிடித்து குத்தாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து குத்தாலம் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
ai marketing future