ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய நுண்கடன் நிறுவனம்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட  வாடிக்கையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய நுண்கடன் நிறுவனம்
X

வாடிக்கையாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நுண்கடன் நிறுவனம்  

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தங்களது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி முன்னுதாரணமாக திகழும் நுண்கடன் நிறுவனம்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் நுண்கடன் நிறுவனங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கடன் பெற்றுள்ள பெண்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் கொரோனா காலத்தில் கடனை திரும்பச் செலுத்த வாடிக்கையாளர்களை வற்புறுத்தக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ள போதிலும், அதனை எந்த நுண்கடன் நிறுவனங்களும் பின்பற்றுவதில்லை. நுண்கடன் நிறுவன அதிகாரிகள் தங்கள் வீட்டின் முன்பு அமர்ந்து கொண்டு வாங்கிய கடனை திரும்பச் செலுத்த வற்புறுத்துவதாகவும், தரக்குறைவாக பேசுவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது வாடிக்கையாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி முன்னதாரணமாக விளங்குகிறது நுண்கடன் நிறுவனம் ஒன்று.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11 கிளைகளை அமைத்து சுமார் 20000 பெண்களுக்கு கடன் வழங்கியுள்ள வளர் ஆதித்தி சோசியல் பைனானஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற இந்த நிறுவனம், வளர் 2010 பரஸ்பர உதவி அறக்கட்டளையின் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்களை வழங்கி வருகிறது. அவ்வகையில், மயிலாடுதுறையில் 1800 வாடிக்கையாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப்பொருள்கள் அடங்கிய தொகுப்பை மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி 100 பேருக்கு வழங்கி தொடங்கி வைத்தார். வாங்கிய பணத்தை உடனடியாக கட்டியே தீரவேண்டும் என்று வற்புறுத்தும் நிறுவனங்களுக்கு மத்தியில் அவர்களது பொருளாதார தேவைகளை புரிந்து கொண்டு நிவாரணம் வழங்கிய நுண்கடன் நிறுவனம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Tags

Next Story
நாமகிரிப்பேட்டையில் பெண் ஐ.டி ஊழியர் மீது தாக்குதல் - குற்றவாளி கைது