கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள்.

கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 18ம் ஆண்டு திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள சாலியர்களுக்குச் சொந்தமான கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயிலில் 18-ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், பெண்கள் திருமணம் நடைபெற வேண்டியும், மாங்கல்ய பலம் வேண்டியும், வாழ்வு வளம் பெற வேண்டும் என குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். இதில், விநாயகர் பூஜை, மகாலெட்சுமி பூஜை நடைபெற்றது. பெண்கள் திருவிளக்குகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், திருவிளக்கிற்கு தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியை, கூறைநாடு சாலியர் மகாஜன சங்கத் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு மங்களப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story