மயிலாடுதுறை: எடமணல் ஊராட்சி பகுதியில் மழை நீர் வடியாததால் மக்கள் அவதி
மயிலாடுதுறை மாவட்டம் எடமணல் கிராமத்தில் மழைநீர் இன்னும் வடியாததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் எடமணல் ஊராட்சி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக எடமணல் ,நடுத்தெரு, பெரிய தெரு ,சஞ்சீவிராயன் கோயில் ஆகிய பகுதிகளில் ஐம்பது குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் வீட்டிற்குள் பூச்சிகள் பாம்புகள் வந்த வண்ணம் உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் தண்ணீர் வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.மேலும் இப்பகுதியில் தெய்வானை குளம் உள்ளது. இந்த குளத்தில் வடிகால் வசதி இல்லாததால் கடந்த 15 நாட்களாக குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் இப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது ஆடு மாடுகளை மேடான பகுதியில் கட்டி பாதுகாத்து வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகம் சார்பில் வடிகாலை வெட்டும் பணியில் ஈடுபட்டபோது அப்பகுதி மக்கள் எங்களுக்கு முறையான வடிகால் வசதி செய்து தரவேண்டும் என்று கூறி தற்காலிக வடிகால் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தினார்கள்.
இதுகுறித்து எடமணல் ஊராட்சி மன்றத் தலைவர் பரிமளம் ராஜ் கூறுகையில் எடமணல் ஊராட்சியில் உள்ள தெய்வானைகுளம் நடுத்தெரு கிராமத்தில் அமைந்துள்ளது .பல்வேறு பகுதியில் உள்ள மழைநீர் இந்த குளத்தில் வடிவதால் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது. இந்த குளத்தில் சென்ற ஆண்டு ஒரு சிறுவன் தடுமாறிக் கீழே விழுந்து இறந்துள்ளான். இந்த நிலையில் குளத்தில் இருந்து முறையானவடிகால் வசதி செய்து தரக்கோரி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிற்கும் சீர்காழி தாசில்தார் சண்முகத்திற்கு நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளேன் .அதிகாரிகள் சரி செய்வதாக தெரிவித்துள்ளனர் என்று கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu