பிறந்த ஆண் குழந்தையை குளத்தில் வீசி சென்ற அவலம்: குத்தாலம் போலீசார் விசாரணை

பிறந்த ஆண் குழந்தையை குளத்தில் வீசி சென்ற அவலம்: குத்தாலம் போலீசார் விசாரணை
X

மல்லியம் ரயிலடி தெருவில் உள்ள குளத்தில் பிறந்த ஒரு சில மணி நேரமான நிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம் மிதக்கும் காட்சி.

மல்லியம் ரயிலடி தெருவில் உள்ள குளத்தில் பிறந்த ஒரு சில மணி நேரமான நிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மல்லியம் ரயிலடி தெருவில் உள்ள குளத்தில் பிறந்த ஒரு சில மணி நேரமான நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் குத்தாலம் போலீசார் அந்த குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். அடையாளம் தெரியாத அந்த பச்சிளம் குழந்தையின் பெற்றோர் யார்? எதற்காக குளத்தில் வீசி சென்றார்கள்? குழந்தை எப்படி இறந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!