மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி..!

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி..!
X

மயிலாடுதுறை தேவாலயங்களில் நடந்த குருத்தோலை ஞாயிறு பவனியில் கலந்துகொண்ட கிறிஸ்தவர்கள் 

மயிலாடுதுறை தேவாலயங்களில் நடந்த குருத்தோலை ஞாயிறு பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.

இயேசு கிறிஸ்து மரித்து, உயிர்த்த நிகழ்வுகளை கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக அனுசரித்து வருகின்றார்கள். இதன் முக்கிய நிகழ்வாக புனித வார முதல் நாளான ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் மறைவட்ட அதிபர் பங்குத்தந்தை தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

மயிலாடுதுறை டி.இ.எல்.சி. பரிசுத்த இம்மானுவேல் தேவாலயத்தில் சபைகுரு ஜெயசீலன் தலைமையில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல், கூறைநாடு புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தலத்தில் குருத்தோலை பவனி பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை தேவாலயங்களில் நடைபெற்ற குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனை வழிபாட்டு நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் குலுத்தோலைகளை ஏந்தி தாவீதின் மகனுக்கு ஓசான்னா என்ற பாடலை பாடியபடி பங்கேற்றனர்.

செய்தி ஒரு கண்ணோட்டம்

மயிலாடுதுறை: குருத்தோலை ஞாயிறு: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்ற பவனி

மயிலாடுதுறை: இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் 40 நாள் தவக்காலத்தின் முடிவில், புனித வாரத்தின் முதல் நாளான குருத்தோலை ஞாயிறு மயிலாடுதுறை தேவாலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குருத்தோலை பவனி:

  • மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில், மறைவட்ட அதிபர் பங்குத்தந்தை தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
  • டி.இ.எல்.சி. பரிசுத்த இம்மானுவேல் தேவாலயத்தில், சபைகுரு ஜெயசீலன் தலைமையில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
  • கூறைநாடு புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தலத்தில், பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது.

பக்தர்களின் பங்கேற்பு:

  • ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி, "தாவீதின் மகனுக்கு ஓசான்னா" என்ற பாடலை பாடியபடி பவனியில் பங்கேற்றனர்.
  • தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
  • பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

பொருள்:

  • குருத்தோலை ஞாயிறு, இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் கோவேறு கழுதையில் வந்ததை நினைவுகூர்கிறது.
  • அந்த நிகழ்வில், மக்கள் குருத்தோலைகளை வீதியில் தூவி, இயேசுவை "தாவீதின் மகன்" மற்றும் "மெசியா" என்று வரவேற்றனர்.
  • இது இயேசுவின் மீதான மக்களின் நம்பிக்கையையும், அவரது రాஜ்ஜியத்தின் வருகையையும் குறிக்கிறது.

முக்கியத்துவம்:

  • குருத்தோலை ஞாயிறு, கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியின் ஒரு முக்கியமான நாளாகும்.
  • இது இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரது உயிர்த்தெழுதலை கொண்டாடும் ஒரு நேரமாகும்.
  • குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டங்கள் மயிலாடுதுறை கிறிஸ்தவ சமூகத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இது பக்தர்களின் ஒற்றுமையையும், இயேசு கிறிஸ்துவின் மீதான அவர்களின் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings