கழிவுநீர் கால்வாயாக மாறிவரும் கழுமலையாறு: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

கழிவுநீர் கால்வாயாக மாறிவரும்  கழுமலையாறு:  சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
X

கழிவுநீர் கலந்து அசுத்தமாக காட்சி அளிக்கும் கழுமலையாறு 

கழுமலை ஆற்றை போர்கால அடிப்படையில் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கழுமலையாறு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் உள்ள கழுமலை ஆற்றின் கிழக்கு பகுதியில் திட்டை, தில்லைவிடங்கன், வடக்குவெளி, திருத்தோணிபுரம், புளியந்தோப்பு உட்பட சுமார் 3000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் தண்ணீர் உரிய நேரத்தில் கிடைக்காததால் வறண்டு போய் கிடந்த கழுமலை ஆற்றை நகர் பகுதியில் ஆற்றில் இருபுறமும் உள்ள வீடுகள் மட்டுமின்றி குடியிருப்பு வளாகங்களில் இருந்தும் குழாய்கள் அமைத்து கழிவுநீரை ஆற்றில் விடுகின்றனர். கழிவுநீர் கலப்பதால் நிலத்தடி நீரின்தன்மை முற்றிலும் மாறிவருகிறது. தற்போது திறக்கபட்டுள்ள மேட்டூர் தண்ணீர் ஒரு சில நாட்களில் வரும் என விவசாயிகள் காத்துள்ளனர்.

இந்நிலையில் தண்ணீர் வந்தால் குப்பைகளும், கழிவு நீரும் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதால் ஆறு மாசுபட்டு கழிவுகள் ஆற்றின் வழியே கடலில் கலப்பதால் கடல் வளமும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளடுள்ளது. மேலும் ஆற்றில் கழிவுநீர் அதிகமாக செல்வதால் கழிவுநீருடன் கலந்து தண்ணீர் வந்தால் அதனை கொண்டு விவசாயம் செய்யமுடியாது என கவலை தெரிவித்தனர். ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் குறித்தும், கழிவுநீர் கலப்பது குறித்தும் பொது பணித்துறையில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே 3000 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கபடுவதை தடுக்க போர்கால அடிப்படையில் கழுமலைஆற்றை சீரமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கழுமலையாறு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
future ai robot technology