பக்தர்களின் காணிக்கை தங்கத்தை உருக்கும் முடிவு: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

பக்தர்களின் காணிக்கை   தங்கத்தை உருக்கும் முடிவு: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்துமுன்னணி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர்

நேர்த்திக்கடனாக செலுத்திய தங்க நகைகளை உருக்கும் தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்

பக்தர்கள் இறைவனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்திய தங்க நகைகளை உருக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து மயிலாடுதுறையில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு, இந்து முன்னணி மயிலாடுதுறை மாவட்ட பொதுச் செயலாளர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் சரண்ராஜ் கலந்து கொண்டு, பக்தர்கள் இறைவனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்திய தங்க நகைகளை உருக்கும் தமிழக அரசைக் கண்டித்து கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பங்கேற்று, மன்னர்கள் காலத்தில் கட்டிய கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஒரு கால பூஜை கூட நடத்தாமல் இருப்பதை கண்டித்தும், அறநிலையத்துறை பிடியிலிருந்து கோயில்களை விடுவிக்க வலியுறுத்தியும், இறைவன் கருவறையில் இருந்து எடுத்து அரசின் கருவூல த்தை நிரப்புவதை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!