ஆதீன கலைக்கல்லூரி பவள விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்பு
தர்மபுர ஆதீனம் சுவாமி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆளுநர் ஆசி பெற்றார்.
மயிலாடுதுறை சைவ மடங்களில் ஒன்றாக தருமபுர ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனம் தமிழ் வளர்ச்சி மற்றும் கல்வி மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு உதவி செய்து சமுதாயத்தில் பங்காற்றி வருகிறது. தருமபுர ஆதீனத்தால் 1946 ஆம் ஆண்டு 25 வது குருமகா. சந்நிதானத்தால் செந்தமிழ்க் கல்லூரியாகத் தொடங்கப் பெற்றது. 26 ஆவது குருமணிகளால் 1988 ஆம் ஆண்டு முதல் கலைக்கல்லூரியாக வளர்ச்சியுற்று, தற்போது 27 வது கயிலை ஸ்ரீ நட்சத்திர குருமணிகளால் புரந்தருளப் பெறும் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியானது இன்று பவளவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதனை முன்னிட்டு தருமபுர ஆதீனம் கலைக்கல்லூரியின் பவளவிழா ஆண்டின் துவக்க விழா ஆதீன மடத்தில் நடைபெற்றது. பவள விழாவில் சிறப்பு அழைப்பாளராக தெலுங்கான கவர்னரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதீனம் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தருமை ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆளுநர் ஆசி பெற்றார். ஆளுநருக்கு ஆதினம் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu