அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: காயமின்றி தப்பிய பயணிகள்
தீ பற்றிய அரசு பேருந்து.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து புதுச்சேரி அரசு பேருந்து இன்று காலை புறப்பட்டு சென்றுள்ளது. பஸ்சை டிரைவர் செந்தில் (40) என்பவர் ஓட்டியுள்ளார், கண்டக்டராக பரசுராமன் (46) என்பவர் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து எட்டு மணிக்கு பொறையாறு பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி புறப்பட்ட பேருந்து ராஜீவ் புறம் என்ற இடத்தில் சென்றபோது பேருந்தின் எஞ்சின் மின்இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதனைக் கண்ட டிரைவர் பாதுகாப்பாக பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தியுள்ளார். தொடர்ந்து அவசர அவசரமாக பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். இதனால் பேருந்தில் பயணித்த 20 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படாமல் உயிர் தப்பினர். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக அமைச்சர் சந்திரபிரியங்கா, நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu