ரயிலில் கஞ்சா கடத்திய 3 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்
கடத்திவரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.
மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாஸ்கரன், சதீஷ்குமார், சரவணன், பஞ்சவர்ணம், ஆகியோர் திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்வே பாதுகாப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ரயில் பெட்டியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த பேக்குகளை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
மேலும் ரயிலில் சந்தேகப்படும் வகையில் பேக்குகள் அருகே இருந்த திருச்சி தாராநல்லூரை சேர்ந்த சிவசங்கர் (25) அவரது மனைவி சத்யா ( 20), சரபேஸ்வரர் (19) ஆகியோரை போலீசார் விசாரணை செய்த போது, முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்துள்ளனர். உடன் அவர்களை மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் வைத்து விசாரணை செய்தபோது, 23 பாக்கெட்டுகளில் 46 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது/
இதுகுறித்து மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவசங்கர். சத்தியசீலன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர் . பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்தவர்களை தஞ்சாவூர் தமிழ்நாடு ரயில்வே போலீஸாரிடம் மேல் விசாரணைக்காக ஒப்படைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu