குப்பைக் கிடங்கில் பயங்கர தீ; அணைக்க முடியாமல் 5 மணி நேரம் போராட்டம்

குப்பைக் கிடங்கில் பயங்கர தீ;  அணைக்க  முடியாமல் 5 மணி நேரம் போராட்டம்
X

தீப்பற்றி எரியும் குப்பைக்கிடங்கு.

சீர்காழி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் தீயை அணைக்க 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.

சீர்காழி நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு, தொடர்ந்து எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.

சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த 24 வார்டுகளிலும் குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பொது இடங்களில் தேங்கும் குப்பைகளை சேகரிக்கப்பட்டு சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

அவ்வாறு அங்கு கொட்டி வைக்கப்படும் குப்பைகள் தனியாக பிரித்து க்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குப்பைகள் நகராட்சி குப்பை கிடங்கில் டன் கணக்கில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஈசானிய தெருவில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ நேரம் செல்ல செல்ல மளமளவென பரவி குப்பைக்கிடங்கு குப்பை முழுவதும் எரிய தொடங்கியது.

இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி ஊழியர்கள் சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குப்பை மலைபோல குவிந்து கிடப்பதால் தீயணைப்பு பணி பெரும் சவாலாக உள்ளது .

தொடர்ந்து தீயணைப்பு வாகனம் மற்றும் நகராட்சி குடிநீர் வாகனம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் கூட்டாக சேர்ந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீவிபத்தால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி ஆகியோர் நகராட்சி குப்பை கிடங்கிற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் தீயை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தீயணைப்பு நிலைய அலுவலரிடம் ஆலோசனை நடத்தினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!